Home உலகம் கிரிக்கெட் : 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுமோசமாக நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை!

கிரிக்கெட் : 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுமோசமாக நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை!

815
0
SHARE
Ad

கார்டிப் (வேல்ஸ்) – உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தும், இலங்கையும் மோதின.

இன்றைய ஆட்டத்தில் வலிமை வாய்ந்த குழுவாகக் கருதப்பட்ட இலங்கை படுமோசமாகத் தோல்வியடைந்தது.  ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக நாணயத்தை சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது.

முதல் பாதி ஆட்டத்தில் 29.2 ஓவர்களில் பத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை 136 ஓட்டங்களுடன் ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

#TamilSchoolmychoice

இதனை அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் எந்த ஒரு விக்கெட்டையும் இழக்காமல் நியூசிலாந்து அபாரமாக விளையாடி 16.1 ஓவர்களிலேயே 137 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து 10 விக்கெட்டுகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் விளையாடிக் கொண்டிருக்கின்றன.