Home நாடு புத்ராஜெயா நோன்பு பெருநாள் உபசரிப்புக்கு பொது மக்கள் அழைக்கப்படுகின்றனர்!

புத்ராஜெயா நோன்பு பெருநாள் உபசரிப்புக்கு பொது மக்கள் அழைக்கப்படுகின்றனர்!

796
0
SHARE
Ad

புத்ராஜெயா: வருகிற நோன்பு பெருநாளை ஒட்டி, பிரதமர் மகாதீர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் சார்பில் கொம்ப்லேக்ஸ் ஶ்ரீ பெர்டானாவில் ஹாரி ராயா திறந்த இல்ல உபசரிப்பை நோன்பு பெருநாள் முதல் நாளன்று ஏற்பாடு செய்துள்ளனர்.

காலை 10 மணி தொடங்கி மாலை 4:30 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் திரலாக வந்து இந்த உபரசரிப்பில் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர். மேலும், பொருத்தமான ஆடைகளை அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

பொதுமக்களுக்காக இலவச பேருந்து வசதிகள் காலை 9.30 மணியளவில் தொடங்கி மூன்று முக்கிய இடங்களில் அதாவது, புத்ராஜெயா செண்ட்ரல், துங்கு மிசான் ஜைனால் அபிட் மசூதி மற்றும் புத்ரா மசூதி ஆகிய இடங்களில் இந்த சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 50,000 பொது மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.