Home இந்தியா காணாமல் போன இந்திய விமானப் படை விமானம் – தேடும் பணி தொடர்கிறது

காணாமல் போன இந்திய விமானப் படை விமானம் – தேடும் பணி தொடர்கிறது

1172
0
SHARE
Ad

புதுடில்லி – (கூடுதல் தகவல்களுடன்-மலேசிய நேரம் இரவு மணி 10.20 நிலவரம்) அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் விமானத் தளத்திலிருந்து இன்று புறப்பட்ட இந்திய விமானப் படையின் என்-32 (AN-32) இரக இந்திய விமானப் படை விமானம் ஒன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை தேடும் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

அந்த விமானத்தில் 8 பணியாளர்கள் 5 பயணிகள் இருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சற்று முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களை ஓர் அவசரக் கூட்டத்திற்கு அழைத்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

இந்த அவசரக் கூட்டத்திற்கான காரணம் காணாமல் போன இந்திய விமானப் படை விமானமா அல்லது வேறு ஏதாவது விவகாரங்களா என்பதும் இதுவரையில் தெரியவில்லை.