கடந்த 2015-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) சுந்தர் பிச்சை பதவிதேற்றார். 46 வயதான இவர் பொறுப்பேற்றதும் கூகுள் நிறுவனத்தில் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.
குறிப்பாக மென்பொருள் துறையில் மட்டும் கவனம் செலுத்தாமல் வன்பொருள் தயாரிப்புகளையும் தயாரிக்கும் பணியை ஆரம்பித்தார். இதனால் கூகுள் நிறுவனம் வேகமாக முன்னேறியது.
இதனால் சுந்தர் பிச்சையின் சிறப்பான செயல்பாட்டுக்காக 2014-ஆம் ஆண்டு அவருக்கு கூகுள் நிறுவனம் 250 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைக் கொடுத்தது. குறிப்பிட்ட பங்குகளை அவரது பெயருக்கு மாற்றியதும் கூகுள் நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்ந்தது. பின்பு, 100 மில்லியன் பங்குகள் கடந்த 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் 250 பங்குகள் 2016-ஆண்டு கொடுக்கப்பட்டது.
தற்போது தொழில்நுட்ப நிறுவனங்களில் மிக அதிக சம்பளம் பெறுபவராக சுந்தர் பிச்சை உள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுந்தர் பிச்சை கூகுள் தனக்கு அளிக்க முன்வந்த பங்குகளை ஏற்க மறுத்துள்ளார். ஏற்கெனவே தனக்கு அதிக சம்பளம் வழங்கப்படுவதால் இதனை வாங்கிக் கொள்ளவில்லை என சிலர் தெரிவிக்கிறார்கள்.
சுந்தர் பிச்சைக்கு வழங்கும் சம்பளம் நிறுவனத்தில் உள்ள மற்றவர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தை விட மிக அதிகமாக இருக்கிறது என சில ஊழியர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.