Home நாடு அடிப்: புதிய அரசாங்க துணை வழக்கறிஞர் நியமிக்கப்படுவார்!

அடிப்: புதிய அரசாங்க துணை வழக்கறிஞர் நியமிக்கப்படுவார்!

703
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் மரண விசாரணைக்கு புதிய துணை அரசாங்க வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என வீடமைப்பு மற்றும் நகராட்சிமன்ற அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார். இந்த நியமனம் குறித்த இறுதி முடிவை தாம் எடுக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவகத்திற்கு தெரிவிக்கபட்டுவிட்டதாகவும், மூத்த துணை அரசாங்க வழக்கறிஞர்களை தமக்கு முன்மொழியுமாறு அவர் கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.

வருகிற ஜூன் 26-ஆம் தேதி இந்த விசாரணை திட்டமிட்டப்படி தொடரும் எனவும் அவர் கூறினார். கூடிய விரைவில் இந்த விசாரணைக்கான வழக்கறிஞர்களின் பெயர் பட்டியலைப் பெற்றதும் தாம் அது குறித்து முடிவு செய்ய உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அண்மையில், அடிப் மரண விசாரணை வழக்கிலிருந்து ஷாஸ்லின் மன்சோர் விலகிக் கொள்வதாகத் தெரிவித்து முற்றிலுமாக இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.

இதனை அடுத்து, அரசாங்க தலைமை வழக்கறிஞரான டோமி தோமஸ் மீதான எதிர்ப்பலை மேலோங்கியது. இது குறித்து கருத்துரைத்த சுரைடா, டோமி சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார் எனக் கூறினார்.