Home கலை உலகம் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட கட்டுமானத்திற்கு கார்த்தி 1 கோடி ரூபாய் நிதியுதவி!

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட கட்டுமானத்திற்கு கார்த்தி 1 கோடி ரூபாய் நிதியுதவி!

1021
0
SHARE
Ad

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணியை விரைந்து முடிக்க தனது சொந்த பணத்திலிருந்து நடிகர் கார்த்தி 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது

இதற்காக, சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடத்தி கட்டிட நிதி திரட்டப்பட்டது. கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் செலவில் தரைதளத்துடன் மூன்று அடுக்குமாடி வசதியுடன் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தில் நடிகர் சங்க அலுவலகம், உடற்பயிற்சி கூடம், கருத்தரங்கு கூடம், திருமண மண்டபம் ஆகியவை இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கட்டுமான பணிக்கு மேலும், பணம் தேவைப்படும் நிலையில், நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலைவிழா நடத்தப்படும் என்று விஷால் கூறியிருந்தார். ஆனால், வரும் 23-ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படவுள்ள வேளையில், இதன் காரணமாக, கலைவிழா நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் கார்த்தி, நடிகர் சங்க கட்டிட கட்டுமான பணியை விரைந்து முடிக்க தன் பங்காக 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். இவரைத் தொடர்ந்து விஷால் 25 இலட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.