Home நாடு அடுத்தடுத்த அரசாங்க நியமனங்கள் குறித்து பிரதமர் கலந்தாலோசிப்பார்!- மொகிதின்

அடுத்தடுத்த அரசாங்க நியமனங்கள் குறித்து பிரதமர் கலந்தாலோசிப்பார்!- மொகிதின்

719
0
SHARE
Ad

பாகோ: அடுத்தடுத்த நியமங்கள் குறித்து பிரதமர் நிச்சயம் அமைச்சரவையில் கலந்தாலோசிப்பார் என தாம் நம்புவதாக பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

லத்தீஃபாவின் நியமனத்தை தற்காத்து பேசிய மொகிதின், ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆயினும், இது குறித்து முன்னரே கலந்தாலோசித்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிடார்.

கடந்த ஜூன் 1-ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கத் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரிடையே பெரிய அளவில் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. இதனிடையே, தாம் இந்த நியமனம் குறித்து எவரிடமும் ஆலோசனைக் கோரவில்லை என பிரதமர் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.