சென்னை: பாஜக உடனான கூட்டணியில் பிளவு ஏற்படுத்த சதி நடப்பதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தது. பாஜகவுக்கு கன்னியாகுமரி, கோவை, சிவகங்களை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் எந்த தொகுதியிலும் பாஜக வெற்றி பெறவில்லை.
இதே போன்று அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வதின் மகன் ஓ.பி. ரவிந்திரநாத்தை தவிர்த்து மற்ற அனைவரும் தோல்வியை தழுவினர். இருப்பினும், மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும், அதிமுகவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் அதிமுக அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த சதி நடப்பதாக அதிமுக கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மத்திய அரசைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குறிப்பாக இந்தி மொழிப்பாட விவகாரத்தில தவறான தகவல்கள் வெளியாகுவதாகவும், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்படுத்த சதிகள் நடக்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் எது உண்மை என்பதை உணர்ந்துள்ளதாகவு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.