Home நாடு நாடாளுமன்ற சிறப்புக் குழு பிரதமரை சந்திக்கும்!- வில்லியம் லியோங்

நாடாளுமன்ற சிறப்புக் குழு பிரதமரை சந்திக்கும்!- வில்லியம் லியோங்

575
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசாங்க முக்கியப் பதவி நியமத்திற்கான நாடாளுமன்ற சிறப்புக் குழு, பிரதமர் மகாதீருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது.

சமீபத்திய மூன்று முக்கிய அரசாங்க நியமனங்கள் குறித்து அந்த செயற்குழுவுடன் கலந்தாலோசிக்காததை அதன் தலைவர் வில்லியம் லியோங் குறிப்பிட்டுக் கூறினார்.

செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினருமான லியோங் கூறுகையில், சமீபத்தில் காவல் துறைத் தலைவர் பதவி நியமனம், தலைமை நீதிபதி நியமனம் மற்றும் தற்போதைய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் நியமனம் குறித்து தங்களுக்கு போதுமான விவரங்கள் அளிக்கப்படவில்லை என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அது தொடர்பான சட்டங்களின்படி அரசாங்க நியமனங்கள் குறித்த விவகாரங்களில் நாடாளுமன்ற குழுவிற்கு முக்கிய பங்கு இல்லையென்றாலும், கலந்தாலோசித்து முடிவு செய்வதினால் மேலும் சிறப்பாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.   

அண்மையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக வழக்கறிஞர் லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டது குறித்து பொது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.