Home வணிகம்/தொழில் நுட்பம் நட்பு நாடுகளுக்கு 5ஜி சேவையை சீனா வழங்கும்!

நட்பு நாடுகளுக்கு 5ஜி சேவையை சீனா வழங்கும்!

807
0
SHARE
Ad

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்நட்பு நாடுகளுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவோம் என சீனா தெரிவித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் அதிபர் ஜி ஜிங்பிங் வெளியிட்டுள்ளார்

உலகின் பல நாடுகளில் 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு தரவு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்தபடியாக 5ஜி தொழில்நுட்பத்தை, வளர்ந்த நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன

இதில் சீன நிறுவனமான வாவே சில நாடுகளுக்கு தொழில்நுட்ப சேவையை அளிக்கத் தொடங்கிய நிலையில் அதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெற்ற பொருளாதார கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜிங் பிங் கலந்து கொண்டார்

#TamilSchoolmychoice

5ஜி தொழில்நுட்பத்தை பொறுத்தளவில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் போட்டியில் இருக்கின்றன. தொழில்நுட்பத்தை வழங்குவதாக கூறும் சீனாவின் நட்பு நாடுகளாக பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்டவை அடங்குகின்றன