கடந்த முறை பரபரப்பான சூழலில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. விஷால் அணியும், சரத்குமார் அணியும் மோதிய போட்டியில் தமிழ் நடிகர்கள் இரண்டு அணியாக பிரிந்து செயல்படும் சூழல் ஏற்பட்டது.
கடந்த முறை வெற்றிப்பெற்ற விஷால் அணி, தாங்கள் அளித்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றவில்லை எனவும், விஷால் சரியாக செயல்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
அதிருப்தியாளர்கள் ஐசரி கணேஷ் தலைமையில் உதயா, சங்கீதா ரமேஷ் கண்ணா எனப் பலர் இணைந்து நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாக்கியராஜ் தலைவராக போட்டியிட ஐசரி கணேஷ் தலைமையில் குழுவினர் கேட்டுக் கொண்டனர். அவரும் அதற்கு ஒப்புக் கொண்டு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐசரி கணேஷ் துணைத் தலைவர் பதவிக்கும், உதயா மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.