Home வணிகம்/தொழில் நுட்பம் சீனா 4 நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை அனுமதி வழங்கியது

சீனா 4 நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை அனுமதி வழங்கியது

889
0
SHARE
Ad

பெய்ஜிங் – வாவே நிறுவனத்திற்கு (Hua Wei) எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தபோதிலும், தனது 5ஜி அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தை பரவலாகச் சந்தைப்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

இதில் முதல் கட்டமாக சீனாவின் நான்கு நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிம அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அதிவிரைவு தொலைத் தொடர்பு வசதிகளை இனி சீனாவில் இந்த நிறுவனங்கள் கொண்டிருக்கும் என்பதோடு, இந்நிறுவனங்களின் அனைத்துலகப் போட்டித் தன்மைகளும் அதிகரிக்கும்.

#TamilSchoolmychoice

முழுமையான வணிகக் காரணங்களுக்காக 5ஜி தொழில்நுட்பத்தை இந்த நிறுவனங்கள் இனி சந்தைக்குக் கொண்டு வர முடியும். சைனா மொபைல் லிமிடெட், சைனா டெலிகோம் கார்ப்பரேஷன், சைனா யூனிகோம் ஹாங்காங் லிமிடெட், சைனா புரோட்காஸ்டிங் நெட்வோர்க் கார்ப்பரேஷன் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கும் 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தை சீனா வழங்கியுள்ளது.

5 ஜி மூலம், சீனாவின் 1.6 பில்லியன் கம்பியில்லாத் தொலைபேசி சந்தாதாரர்களின் வசதிகள் பெருகும். அனைத்துலக அளவிலும் இந்த சீன நிறுவனங்களின் போட்டித் தன்மையும் அதிகரிக்கும்.

இதற்கிடையில், அமெரிக்கத் தடைகளைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5ஜி தொழில் நுட்ப வசதிகளை வழங்க சீனா முனைப்புடன் பாடுபட்டு வருகிறது. வாவே நிறுவனத்தோடு வணிகத் தொடர்புகளை முறியடிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் அமெரிக்கா நெருக்குதல் தரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், சீனாவோ, ஆப்பிரிக்க நாடுகளை நோக்கி தன் செயல்பாட்டைத் திருப்பியுள்ளது.

ஏற்கனவே இந்த ஆப்பிரிக்க நாடுகளில் தனது தகவல் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப வசதிகளை சீனா ஏற்படுத்திக் கொடுத்து கால் ஊன்றி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.