Home உலகம் கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை

கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை

1207
0
SHARE
Ad
வெற்றிக் களிப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் வீராட் கோலி

இலண்டன் – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஓவல் அரங்கில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அபாரமாக விளையாடி 127 ஓட்டங்கள் எடுக்கும் வரை இந்தியா ஒரு விக்கெட் கூட இழக்காமல் வலுவுடன் நின்றது. இறுதியில் 50 ஓவர்களில் 352 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

ஆட்டத்தைத் தொடங்கும் விளையாட்டாளர்களாக (ஓப்பனி்ங் பேட்ஸ்மேன்) களமிறங்கிய ஷிக்கர் தவான், ரோஹிட் ஷர்மா இருவரும் அபாரமாக விளையாடினர். ரோஹிட் 57 ஓட்டங்கள் எடுக்க, ஷிக்கர் தவான் 117 ஓட்டங்கள் எடுத்தார். 127 ஓட்டத்தின்போதுதான் முதல் விக்கெட் இழப்பு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து விளையாடிய வீராட் கோலியும் சிறப்பாக விளையாடி 82 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் இரண்டாவது பாதியில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 316 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்று திங்கட்கிழமை சவுத்ஹேம்டனில் நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன.