Home இந்தியா காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

931
0
SHARE
Ad
காணாமல் போன இந்திய விமானப் படையின் ஏஎன் 32-இரக விமானத்தின் மாதிரி – கோப்புப் படம்

புதுடில்லி – கடந்த ஜூன் 3-ஆம் தேதி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் பார்வையில் இருந்து மறைந்த ஏஎன்-32 (AN32) இரக இந்திய விமானப்படை விமானத்தின் சிதைந்த பாகங்கள், 8 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் இன்று அருணாச்சல பிரதேச மாநிலத்தின் காட்டுப் பகுதி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட அந்த விமானத்தில் பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட13 பேர் பயணம் செய்தனர். அவர்கள் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.

12 ஆயிரம் அடிகள் உயரமான மலைப் பிரதேசத்தில் அந்த விமானத்தின் உடைந்த பாகங்களை தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக இந்திய விமானப் படை அறிவித்தது.