Home இந்தியா நிலுவையில் இருந்த 2,200 கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது!

நிலுவையில் இருந்த 2,200 கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது!

686
0
SHARE
Ad

சென்னை: அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுக்கு உண்டான 2,200 கோடி ரூபாய் நிதி ஏற்கனவே நிலுவையில் இருந்ததாகவும், அது தற்போது தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

முன்னதாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநில ஆளுனர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது. பாஜக ஆட்சி இல்லாத தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த ஆளுனர்கள் ஒரே நாளில் உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

#TamilSchoolmychoice

இந்நிலையில் தமிழகத்துக்கான நிலுவை நிதியை ஒதுக்கிய அமித் ஷா தமிழகத்துக்கு மத்திய பாஜக ஆட்சியில் மேலும் பல திட்டங்கள் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.