Home நாடு “அரசியல் சில சமயங்களில் அதன் மோசமான தேற்றத்தை வெளிப்படுத்தும்!”- கைரி

“அரசியல் சில சமயங்களில் அதன் மோசமான தேற்றத்தை வெளிப்படுத்தும்!”- கைரி

831
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை பிகேஆர் கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் போன்ற தோற்றத்தில் இருந்த ஆடவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்சிகள் நிறைந்த காணோளி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து அது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மூலத் தொழில் துணையமைச்சரான பிகேஆர் கட்சியின் ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்னின் செயலாளர்களில் ஒருவரான முகமட் ஹசிக் அசிஸ் என்பவர் இன்று புதன்கிழமை (12 ஜூன்) அதிகாலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், அந்த அமைச்சருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது நான்தான் என பகிரங்கமாக அறிவித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து பல அரசாங்கத் தலைவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கருத்துகள் தெரிவித்து வரும் வேளையில், ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான கைரி ஜாமாலுடின் இந்த அரசியல் தவறிலிருந்து மலேசியர்கள் தங்களின் கவனத்தை திசைத் திருப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

அரசியல் ஒரு கடினமான துறை, சில நேரங்களில் அது அழுக்குப்படிந்திருக்கும். சில நேரங்களில் அதன் அழுக்கு படிவங்கள் மிகவும் மோசமானது. இன்று அது அந்த மோசமான நிலையை அடைந்துள்ளது” என்று அவர் தனது இன்ஸ்டகிரேம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை காணொளி ஒன்றின் மூலமாக ஹசிக் அசிஸ் தாம்தான் அந்த காட்சியில் இருந்ததென்றும், இது கடந்த மே 11-ஆம் தேதி சண்டாக்கானில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் நடந்ததென்றும் கூறியிருந்தார்.  தமக்கு தெரியாமல் இந்த காணொளி பதிவு செய்யப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட அந்த அமைச்சர், அமைச்சர் பதவியை வகிப்பதற்கு அருகதையற்றவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.