Home உலகம் அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் விளம்பரம் வெளியிட்டுள்ளது!

அபிநந்தனை கேலி செய்யும் வகையில் பாகிஸ்தான் விளம்பரம் வெளியிட்டுள்ளது!

1033
0
SHARE
Ad

இஸ்லாமாபாட்: வருகிற ஜூன் 16-ஆம் தேதி இந்தியாபாகிஸ்தான் இடையை  நடைபெறவுள்ள உலகக் கிரிக்கெட் கோப்பை போட்டியை குறிக்கும் விதமாக, பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவரை நடிக்க வைத்து கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவ்விளம்பரமானது இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் மரணம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய விமானப் படை பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான பாலகோட்டுக்குச் சென்று தீவிரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தியது.

#TamilSchoolmychoice

இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த எப் 16 ரக விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை கொண்டு விரட்டியடிக்கப்பட்டது. அப்போது மிக் 21 ரக விமானத்தை இயக்கிய அபிநந்தன் பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டார்.

இதனிடையே, அபிநந்தன் தங்கள் வசம் சிக்கிக் கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் இராணுவம் காணோளி ஒன்றை வெளியிட்டது. அந்த காணோளியில் அபிநந்தன் தேநீர் குடித்துக் கொண்டே பேசுவார்.

இந்நிலையில், உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள விளம்பர காணொளியில், இந்திய கிரிக்கெட் அணி போன்ற உடையணிந்து, அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவர் தேநீர் குடித்துக் கொண்டேஎம் சோரி. ஐ நோட் சப்போஸ் டு டேல் யூ’ (Am sorry. I not supposed to tell this) என்று திரும்ப திரும்ப கூறுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.