Home நாடு ஓரினச் சேர்க்கை காணொளி : ஹசிக் அப்துல்லா காவல் துறையில் புகார்

ஓரினச் சேர்க்கை காணொளி : ஹசிக் அப்துல்லா காவல் துறையில் புகார்

693
0
SHARE
Ad
முகமட் ஹசிக் அசிஸ்

பெட்டாலிங் ஜெயா – சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை காணொளியில் அஸ்மின் அலியோடு இருந்தது நான்தான் என அறிவித்திருக்கும் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் இந்த விவகாரம் தொடர்பில் கிளானா ஜெயா (சிலாங்கூர்) காவல் நிலையத்தில் புகார் ஒன்றைச் செய்திருக்கிறார்.

தனது காவல் துறை புகாரை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் 27 வயதான ஹசிக் அப்துல்லா “என்னை எப்படி வேண்டுமானாலும் விமர்சியுங்கள். ஆனால் நான் பொய் கூறுபவனாக வளர்க்கப்படவில்லை” எனவும் தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

எனினும் எந்தத் தேதியில் அவர் இந்தக் காவல் துறைப் புகாரைச் செய்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

தனக்கு எதிராக இணையவாசிகளும் மற்றவர்களும் குறிப்பாக அஸ்மின் அலியின் அரசியல் செயலாளர் ஹில்மான் இடாம் கூறிவரும் எதிர் கருத்துகளுக்கும், கண்டனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக தான் இந்தப் புகாரைச் செய்திருப்பதாக ஹசிக் கூறியிருக்கிறார்.

ஹசிக்கின் புகார் இன்று வியாழக்கிழமை (ஜூன் 13) பெறப்பட்டதாக சிலாங்கூர் குற்றவியல் பிரிவுத் தலைவர் பாட்சில் அகமட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை அஸ்மினின் அரசியல் செயலாளர் ஹில்மான், ஹசிக்குக்கு எதிராக புத்ரா ஜெயாவில் உள்ள காவல் துறையிலும் இஸ்லாமியத் துறையிலும் புகார் ஒன்றைச் செய்திருக்கிறார்.

அஸ்மினின் அரசியல் செயலாளர் ஹில்மான் அண்மையில் புத்ரா ஜெயாவிலுள்ள ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி ஒன்றில் சந்தித்து சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை காணொளியில் இருந்ததை மறுக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் தனது காவல் துறை புகாரில் ஹசிக் தெரிவித்திருக்கிறார்.

தங்களின் சந்திப்பு நடைபெற்றதை உறுதிப்படுத்திய ஹில்மான் எனினும் தாங்கள் எதைப்பற்றி விவாதித்தோம் என்பது குறித்துக் கூறவில்லை.