Home நாடு அஸ்மின் அலி மறுத்த சில மணி நேரங்களில் இரண்டாவது காணொளி வெளியீடு

அஸ்மின் அலி மறுத்த சில மணி நேரங்களில் இரண்டாவது காணொளி வெளியீடு

1028
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது நானல்ல என்றும் என்னை அரசியல் ரீதியாக ஒழித்துக் கட்ட மேற்கொள்ளப்படும் முயற்சி இது என்றும் அஸ்மின் அலி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இன்று மாலை தெரிவித்த சில மணி நேரங்களில் அவர் இருப்பது போன்ற இரண்டாவது காணொளி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருப்பதாக மலேசியாகினியின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருக்கும் இரு ஆடவர்களின் மூன்று காணொளிகள் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து அந்தக் காணொளியில் இருக்கும் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் ‘அந்த ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது நான்தான். என்னுடன் இருப்பது அஸ்மின் அலி’ என பரபரப்பான காணொளி ஒன்றை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அஸ்மின் அலி, காணொளியில் இருப்பது நானல்ல என மறுத்தார்.

#TamilSchoolmychoice

அவர் மறுத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ஒரு நிமிடம் 29 வினாடிகள் ஓடும் மற்றொரு காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தக் காணொளியிலும் அதே இரண்டு ஆடவர்கள் காட்சி தருகிறார்கள். முந்தைய காணொளியில் காணப்படும் அதே தங்கும் விடுதி அறையில் அதே சூழ்நிலையில் இந்தக் காணொளியிலும் அந்த இரு ஆடவர்களும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது காட்டப்படுகிறது.