Home 13வது பொதுத் தேர்தல் அன்வார் இப்ராகிம் பேராக் மாநிலத்தில் போட்டியிடுகிறார்!

அன்வார் இப்ராகிம் பேராக் மாநிலத்தில் போட்டியிடுகிறார்!

514
0
SHARE
Ad

anwar-sarawak-electionபெட்டாலிங் ஜெயா, ஏப்.3- வரும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேராக் மாநிலத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடவுள்ளார்.

இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தின் போது தான் பேரா மாநிலத்திலுள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாகவும், அதே சமயம் சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் தன்னுடைய ஆதரவாளர்கள் இதனால் வருத்தம் கொண்டிருப்பதால் அவர்களை சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மக்கள் கூட்டணியை பேராக் மாநிலத்தில் பலப்படுத்த வேண்டும் என்றும், அதற்காக பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்களையோ வாக்காளர்களையோ தான் நிராகரிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

#TamilSchoolmychoice

மக்கள் கூட்டணி வகுத்துள்ள வியூகத்தின் மூலம் மீண்டும் பேராக் மாநிலத்தை கைப்பற்ற முடியும் என்று நம்புவதாகவும் அன்வார்  தெரிவித்துள்ளார்.  ஆனால் அவர் பேராக் மாநிலத்தில் எந்த தொகுதியில் போட்டியிடவுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த  பொதுத்தேர்தலில்  பேராக் மாநிலத்தை மக்கள் கூட்டணி கைப்பற்றியது. கட்சி மாறியி ஒருசிலரின் அரசியல் பிரச்சினைகளால் அம்மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை மீண்டும் மக்கள் கூட்டணி பேராக் மாநிலத்தைக் கைப்பற்றும் வாய்ப்புள்ள சூழ்நிலையில் பழைய கட்சி தாவல்கள் போன்று எதுவும் நடந்து விடாமல் இருக்க அன்வாரே நேரடியாக பேராக் மாநிலத்தில் களம் இறங்கவிருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.