Home 13வது பொதுத் தேர்தல் பொதுத்தேர்தலில் சுங்கை சிப்புட்டில் போட்டியிட்டால் நிச்சயமாக வெற்றி பெறுவேன் – சாமிவேலு

பொதுத்தேர்தலில் சுங்கை சிப்புட்டில் போட்டியிட்டால் நிச்சயமாக வெற்றி பெறுவேன் – சாமிவேலு

786
0
SHARE
Ad

Samy Velluகோலாலம்பூர், ஏப்.3- பிரதமர் அனுமதி வழங்கினால் வரும் பொதுத்தேர்தலில் சுங்கை சுப்புட் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ம.இ.கா.தலைவர் டத்தோஶ்ரீ உத்தாமா சாமிவேலு கூறியுள்ளார்.

சாமிவேலுவின் கோட்டையாக இருந்து வந்த சுங்கை சுப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த பொதுத்தேர்தலில் அவர் தோல்வியை தழுவினார்.

ஆனால் இம்முறை தேர்தலில் களம் இறங்கினால் நான்  வெற்றி பெறுவது நிச்சயம் என்று அவர் கூறி வருகிறார்.

#TamilSchoolmychoice

இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய சாமிவேலு, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம்மை ஒரு வேட்பாளராக தேர்ந்தெடுத்தால் தேர்தலில் போட்டியிட தான் தயார் என்றார்.

வரும் பொதுத்தேர்தலில் ம.இ.கா. தேசியத்தலைவர் டத்தோஶ்ரீ ஜி.பழனிவேல் உள்ளிட்ட தலைவர்கள் தங்களுக்கு பாதுகாப்பான  தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடவுள்ளார்களா? என்று வினவிய போது, “பாதுகாப்பான தொகுதி என்று எதுவுமே இல்லை” என்று சாமிவேலு கூறினார்.

மஇகா தலைமைப் பொறுப்பிலிருந்து 2011இல் விலகிய சாமிவேலுவை அரசாங்கம், இந்தியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்குமான உள்கட்டமைப்பு விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராக நியமனம் செய்தது.