புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்புத் திறனறிவு (ICT) இடைவெளியைக் குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. தித்தியான் டிஜிட்டல் திட்டம் அமைக்கப்பட்டதன் வழி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டார பொது மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கிறது.
இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன் கணேசன் கலந்து கொண்டு திறப்புரை ஆற்றினார்.
அவர் தம் உரையில், இன்றையப் போட்டியில் பங்குக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மலாக்கா மாநிலத்தில் முதல் முறையாக நடைபெறும் இப்போட்டியில் 20 தமிழ் பள்ளிகள் கலந்துகொண்டது பெருமையாக உள்ளது எனவும் அடுத்த வருடம் முழுமையாக 21 தமிழ்பள்ளிகளும் பங்கெடுக்க முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தித்தியான் திட்டத்தின் வழி முழுமையாக தொழில்நுட்ப தாக்கம் மலாக்காவில் உள்ள அனைத்து தமிழ்பள்ளிகளுக்கும் சென்றடைய வேண்டும் எனவும், அதற்காக அனைத்து நல்லுள்ளங்களும் ஒன்றினைந்து செயல் பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் எனவும் அவர் தம் உரையில் பதிவு செய்தார்.
இவ்வாண்டு மலாக்கா மாநிலத்திலிருந்து சுமார் 59 மாணவர்களும் 20 பள்ளிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டனர். தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன.
தேசிய நிலையிலான . தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மலாயா பல்கலைகழக வளாகத்தில் நடைப்பெறும்.
MELAKA STATE LEVEL ICT QUIZ WINNERS 2019
1. சவுமியா கனேசன், புலாவ் செபாங் தமிழ்பள்ளி
2. நனினேசன் சங்கர், பெகான் தெபொங் தமிழ்பள்ளி
3. நர்மதா குணாளன், பத்தாங் மலாக்கா தமிழ்பள்ளி
4. திவ்யன் கார்த்திகேசன், செர்கம் தோட்ட தமிழ் பள்ளி
5. நவிவர்மா மோகன் பெகான், தெபொங் தமிழ் பள்ளி
6. யாதவன் நமெஷ், டுரியான் துங்கால் தமிழ்பள்ளி
7. அருமதி செல்வராஜ், டுரியான் துங்கால் தமிழ்பள்ளி
8. விசாலி ராமராஜு, டுரியான் துங்கால் தமிழ்பள்ளி
9. சஞ்சீவன் குமர வடிவேலு, புலாவ் செபாங் தமிழ் பள்ளி
10. நிரோசன் கிலேமன்த், புகிட் லிந்தாங் தமிழ்பள்ளி
11. கலைச்செல்வி விமலன், பாயா ரும்புட் தமிழ்பள்ளி
12. கோகிலேசிரி மகேந்திரன், புகிட் காஜாங் தமிழ்பள்ளி
மேற்காணும் பட்டியல்படி மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 12 நிலை வெற்றியாளர்களான இம்மாணவர்கள் தேசிய நிலையிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.