Home உலகம் புதுவை மு.இளங்கோவன் சுவிட்சர்லாந்து சுற்றுப் பயணம்

புதுவை மு.இளங்கோவன் சுவிட்சர்லாந்து சுற்றுப் பயணம்

1350
0
SHARE
Ad

புதுச்சேரி – புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளரும், கல்வியாளருமான முனைவர் மு.இளங்கோவன் (படம்) எதிர்வரும் ஜூன் 19 தொடங்கி ஜூன் 23 வரை சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறார்.

அங்கு சூரிச் நகரிலும் அருகில் உள்ள ஊர்களிலும் தங்கி அந்நாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்களைச் சந்திப்பதோடு அங்கு தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ்க் கல்வி முறைகளையும் அறிவதையும் நோக்கமாகக் கொண்டு இளங்கோவன் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சில இலக்கியச் சந்திப்புகளையும் இளங்கோவன் சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தவுள்ளார்.

தமிழ் ஆர்வலர்கள் அவரைத் தொடர்பு கொள்ள:

muelangovan@gmail.com
வாட்சப் எண்: 00919442029053
தொடர்புக்கு: 0045 318 25019