நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. முதல் பாதி ஆட்டத்தில் 50 ஓவர்களில் 268 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்த இந்தியா 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 34.2 ஓவர்களிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனைத் தொடர்ந்து 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
அடுத்து ஜூன் 30-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இன்று வெள்ளிக்கிழமை ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இலங்கையும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன