Home கலை உலகம் “எலந்தப் பயம்” புகழ் விஜயநிர்மலா காலமானார்

“எலந்தப் பயம்” புகழ் விஜயநிர்மலா காலமானார்

1387
0
SHARE
Ad

ஹைதராபாத் – 1960-ஆம் ஆண்டுகளில், இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ‘பணமா பாசமா’ என்ற படத்தில் இடம் பெற்ற ‘எலந்தப் பயம்…எலந்தப் பயம்’ பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது. கண்ணதாசனின் குத்துப் பாடல்கள் வரிசையில் அதிகப் புகழ்பெற்ற பாடலாகவும் இது கருதப்படுகிறது.

அந்தப் பாடலுக்கு நடனமாடியதன் மூலம் ஒரே படத்தில் – ஒரே பாடலில் – தமிழக இரசிகர்களைக் கொள்ளை கொண்ட விஜய நிர்மலா தனது 73-வது வயதில் உடல் நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார்.

பின்னர் பல தெலுங்குப் படங்களிலும் நடித்த இவர் இதுவரை 44 திரைப்படங்களை இயக்கியுள்ளார். மிக அதிகமான படங்களை இயக்கிய பெண் இயக்குநர் இவர்தான் என்றும் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவைத் திருமணம் செய்து கொண்டவர் விஜயநிர்மலா. விஜய நிர்மலா கிருஷ்ணாவுக்கு இரண்டாவது மனைவியாவார்.

கிருஷ்ணாவின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்தான் இன்றைய பிரபல நடிகர் மகேஷ் பாபு. அந்த வகையில் மகேஷ்பாபுவுக்கு விஜய நிர்மலா சிற்றன்னையாவார்.