Home இந்தியா கராத்தே தியாகராஜன் காங்கிரசில் இருந்து இடைநீக்கம்

கராத்தே தியாகராஜன் காங்கிரசில் இருந்து இடைநீக்கம்

785
0
SHARE
Ad

சென்னை – தமிழகக் காங்கிரசின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் கராத்தே தியாகராஜன் (படம்) காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.

கட்சிக்கு எதிராகச் செயல்பட்டார் என்ற காரணத்திற்காக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக கராத்தே தியாகராஜன் பேசியதாகவும், பாஜகவுடன் நெருக்கமாகச் செயல்படும் ரஜினிகாந்துக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்றும் காரணம் காட்டி அவர் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவருக்கு வழங்கப்பட்ட இடைநீக்கக் கடிதத்தில் காரணங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.