Home நாடு தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக சங்கம் தொடர்ந்து போராடும் – ஜி.சங்கரன்

தோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக சங்கம் தொடர்ந்து போராடும் – ஜி.சங்கரன்

965
0
SHARE
Ad

மெந்தகாப் – தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பகாங் மாநிலக் கிளையின் 19-ஆவது மூன்றாண்டு பிரதிநிதிகள் மாநாடு கடந்த ஜூன் 25-ஆம் தேதி மெந்தகாப் எம்.கே.பேங்குவெட் (MK Banquet) மண்டபத்தில் நடந்தேறியது.

பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்து தோட்டம் மற்றும் செம்பனை ஆலைகளின் பிரதிநிதிகள், “ஒற்றுமையே பலம்” என்ற இம்மாநாட்டின் கருப்பொருளுக்கேற்ப பங்கேற்று சிறப்பித்தனர்.

இம்மாநாட்டினை சங்கத்தின் தேசியப் பொதுச்செயலாளர்  டத்தோ ஜி.சங்கரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். அவர் தனது உரையில் சங்கத்தின் வழி நிறைய அனுகூலங்கள் தோட்ட மக்களுக்கு கொண்டுச் சேர்க்கப்படுகிறது. சங்கம் மற்றும் மா.பா. ஒப்பந்தம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சம்பள உயர்வுக்காகவும் தோட்ட மக்களின் வாழ்வாதாரம் நலன்களுக்காகவும் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் மட்டும்தான் இன்றுவரை வாதாடிவருகிறது. ஆக சங்கம் தனது கடமையை சிறப்பாக செய்யும் என சங்கரன் தனது  திறப்புரையில் கூறினார்.

#TamilSchoolmychoice

பகாங் மாநிலச் செயலாளர்- செ.உகனேஸ்வரன் வருகைப்பதிவு செய்த அனைத்து விருந்தினர்களுக்கும் பகாங் மாநிலக்கிளையின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

ஜி.சங்கரன் கொடுக்கும் ஒத்துழைப்பும் ஆர்வமும் கிளையின் ஆண்டு நடவடிக்கைகள் சிறப்பாக நடக்க பெரிதும் உதவுகிறது என்றும் செ.உகனேஸ் தனதுரையில் கூறினார்.

பகாங் மாநிலத் தலைவர் திரு.ஆறுமுகம் தோட்ட நிர்வாகத்துடன் அணுக்கமான முறையில் இணைந்து செல்வது சாலச்சிறந்தது. சில நிர்வாகம் கரடுமுரடான சூழ்நிலையை ஏற்படுத்தும்; அங்கு நாம் வேறொரு யுத்தியை கையாள வேண்டும். தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் 73-வது அகவையை சந்தித்தாலும் தனது தலையாய கடமையைச் செய்து வருகின்றது என்று ஆறுமுகம் கூறினார்.