Home நாடு ஜூலை 1-ஆம் தேதி முதல் 40 காசு சீனி வரி அமல்படுத்தப்படும்!

ஜூலை 1-ஆம் தேதி முதல் 40 காசு சீனி வரி அமல்படுத்தப்படும்!

664
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை தொடங்கி சீனி வரி அமலுக்கு வருவதால் மக்கள் குளிர்பானங்களை அருந்துவது 50 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிகமான பருமன் கொண்ட நாடாக மலேசியா விளங்குவது தொடர்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வொன்றில், 1,022 பேரில் 59 விழுக்காட்டினர் குளிர்பானங்களைத் தவிர்ப்பதாகக் கூறி, முற்றிலுமாக அனைத்து வித இனிப்பு பானங்களையும் தவிர்க்க உள்ளதாக 13 விழுக்காடு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாண்டு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி லிட்டருக்கு 40 காசு விலை உயர்வு இனிப்பு பானங்களுக்கு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது