Home நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான சொத்து அறிக்கையை அறிவித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறான சொத்து அறிக்கையை அறிவித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்!

623
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தங்கள் சொத்துகளை அறிவிக்கும் போது தவறான தகவல்களை வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று ஆண்டு வரையிலும் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற தீர்மானத்தை இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.  

இந்த செயல்முறையானது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் தங்கள் சொத்துகளை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்க வழிவகுக்கும் என்று பிரதமர் துறை அமைச்சர் லியூ வூய் கியோங் தெரிவித்தார்.

தவறான அறிவிப்பைச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தண்டனைச் சட்டம் பிரிவு 199-க்கு உட்பட்டவர்கள் என்றும், தண்டனைச் சட்டம் பிரிவு 193-இன் கீழ் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் லீ கூறினார்.

#TamilSchoolmychoice

சொத்துகளை அறிவிக்க கட்டாயப்படுத்தும் எந்தவொரு சட்டமும் இதுவரை இல்லை என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இதன் அடிப்படையில், சொத்துகளை அறிவிக்க வேண்டிய சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்தில் முன்மொழியப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.