Home உலகம் கோப்பா அமெரிக்கா : 3-1 கோல்களில் பெருவைத் தோற்கடித்து கிண்ணத்தை வென்றது பிரேசில்

கோப்பா அமெரிக்கா : 3-1 கோல்களில் பெருவைத் தோற்கடித்து கிண்ணத்தை வென்றது பிரேசில்

1022
0
SHARE
Ad

ரியோ டி ஜெனிரோ (பிரேசில்) – பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்நாட்டு நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கான கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கான இறுதிச் சுற்று போட்டிகளில் பிரேசில் 3-1 கோல் எண்ணிக்கையில் பெருவைத் தோற்கடித்து கிண்ணத்தை வெற்றி கொண்டது.

பிரேசிலின் முதல் கோலை எவெர்ட்டன் சொவரஸ் 15-வது நிமிடத்திலேயே புகுத்தினார். தொடர்ந்து இரண்டாவது கோலை கேப்ரியல் ஜீசஸ் அடிக்க, 90-வது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பை, மூன்றாவது கோலாக்கினார் ரிச்சர்லிசன்.

44-வது நிமிடத்தில் பெரு ஒரே ஒரு கோலை மட்டுமே அடிக்க முடிந்தது. பாவ்லொ குவெரோ அந்தக் கோலை அடித்தார்.