Home இந்தியா சரவணபவன் இராஜகோபால் சிறையில் அடைப்பு!

சரவணபவன் இராஜகோபால் சிறையில் அடைப்பு!

1338
0
SHARE
Ad

சென்னை: கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் நடந்து வந்த பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகளான சரவணபவன் இராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்

சரவணபவன் உணவகத்தில் உதவி மேலாளராக பணியாற்றியவரின் மகள் ஜீவஜோதி என்பவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே ஜீவஜோதியை அடைவதற்காக, அவரது கணவரை, இராஜகோபால் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது

இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு, இராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து இராஜகோபால் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்

#TamilSchoolmychoice

உடல் நிலையை காரணம் காட்டி இராஜகோபால் ஜாமின் பெற்று, சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்த வழக்கில், இராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது

இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, ஜூலை 7-ஆம் தேதிக்குள் சரணடைந்து சிறை செல்ல வேண்டும் என உத்தரவிட்டது

ஆயினும், உடல்நிலை சரியில்லாததால், சரணடைய அவகாசம் கோரி, இராஜகோபால் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில், திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட நிலையில், உடல்நிலை எப்படி இருந்தாலும் இராஜகோபால் உடனடியாக சரணடைந்து சிறைக்குச் செல்லவேண்டும் என்று உத்தரவிட்டது