Home நாடு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நான்கு வெளிநாட்டவர்கள் கைது!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நான்கு வெளிநாட்டவர்கள் கைது!

641
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட இருந்த நால்வரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சிலாங்கூர் மற்றும் கெடா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹமிட் பாடோர் தெரிவித்தார்.

கைதானவர்களில் இருவர் மியான்மார் நாட்டினைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டார். மற்றொருவர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை புக்கிட் அமான் உளவுத்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவால் (இ8) மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நால்வரும் 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்ற சிறப்பு நடவடிக்கை (சொஸ்மா) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.