Home இந்தியா வைகோவுக்கு மாநிலங்களவைக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது!

வைகோவுக்கு மாநிலங்களவைக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது!

941
0
SHARE
Ad

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் மாநிலங்களவைக்கு செல்ல வைகோவுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. 

வருகிற 18-ஆம் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் இரண்டு உறுப்பினர்களும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்

திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியிலிருந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்

#TamilSchoolmychoice

2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வைகோ மீது தொரடப்பட்ட தேசத் துரோக வழக்கு காரணமாக வைகோ மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் போட்டியாளராக அறிவிக்கப்பட்டாலும் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற சூழல் ஏற்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 5-ஆம் தேதி வைகோ குற்றவாளி என்றும், அவருக்கு ஒரு வருட காலம் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. வைகோவுக்கு பதிலாக மாற்று வேட்பாளரும் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்புமனுக்கள் மீது நேற்று செவ்வாய்க்கிழமை பரிசீலனை நடைபெற்றதில், வைகோவின் மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.