Home நாடு இளம் வயது வாக்காளர்களின் உரிமைகள், பொறுப்புகள் குறித்த கல்வி பள்ளிகளில் தொடங்க வேண்டும்!

இளம் வயது வாக்காளர்களின் உரிமைகள், பொறுப்புகள் குறித்த கல்வி பள்ளிகளில் தொடங்க வேண்டும்!

697
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மேல்

சிரம்பான்: வாக்களிக்கும் வயதினை 21-லிருந்து 18 வயதுக்கு குறைப்பு, தேர்தல் வேட்பாளர்களின் தானியங்கி பதிவு மற்றும் வாக்களிக்கும் தகுதி 18 வயதில் தொடங்குவது போன்ற பரிந்துரைகள் நாட்டு பற்று மற்றும் ஜனநாயக செயல்முறை அம்சத்துடன் கொண்ட கல்வியுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மாநில மருந்துகள், கைத்தொழில், தொழில்முனைவோர், கல்வி மற்றும் மனிதாபிமான விவகாரக் குழுவின் தலைவர் டாக்டர் முகமட் ராபி கூறியுள்ளார்.

வாக்காளர்கள் தங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்து கொண்ட பிறகு அவர்களை வாக்களிக்க தயார் படுத்துவது முக்கியம் என்று அவர் கூறினார்.

வாக்காளர்களாகிய அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய வெளிப்பாடு மற்றும் புரிதலை வழங்குவதற்காக பள்ளிகளில் 15 வயதிலேயே இந்த கல்வி தொடங்கப்பட வேண்டும். அவர்களின் வாக்குகள் ஏன் முக்கியமானது என்றும் தவறான முடிவுகள்  நாட்டின் ஆட்சியை பாதிக்கும்என்றும் அவர் தெரிவித்தார்.