Home 13வது பொதுத் தேர்தல் வான் அஸிஸா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – அன்வார் அறிவிப்பு

வான் அஸிஸா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – அன்வார் அறிவிப்பு

564
0
SHARE
Ad

Wan Azizahபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 4 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில், தன் மனைவியான வான் அஸிஸா எந்த சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லை என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அன்வார் இப்ராகிமின் துணைவியாரும், கெஅடிலான் கட்சித் தலைவருமான டத்தின்ஸ்ரீ வான் அஸிஸா, வரும் பொதுத்தேர்தலில் சிலாங்கூரிலுள்ள சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று கடந்த வாரம் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில்,

நேற்று தனது மனைவி மற்றும் மகள் நூருல் இஸ்ஸாவுடன் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அன்வார் இது பற்றி கூறுகையில்,

#TamilSchoolmychoice

“அஸிஸாவால் கட்சி தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த முடியும். ஆனால் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று முடிவு எடுத்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

பெர்மாந்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 1999ஆம் ஆண்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்த டத்தின்ஸ்ரீ வான் அஸிஸா தன் கணவர் டத்தோஸ்ரீ அன்வார் போட்டியிட வழி செய்யும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 2008ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.