Home 13வது பொதுத் தேர்தல் ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது!

ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது!

511
0
SHARE
Ad

johorமெர்சிங், ஏப்ரல் 4-ஜொகூர் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் (படம்), ஜோகூர் சட்டமன்றத்தை கலைப்பது தொடர்பான அறிக்கையில் இன்று காலை கையெழுத்திட்டார்.

ஜோகூர் மாநில சட்டசபை சபா நாயகர் டத்தோ அலி இஸ்கண்டார் மற்றும் மாநில செயலாளர் டத்தோ ஓபெத் தவில் ஆகியோர் இன்று காலை, ஜோகூர் சுல்தானை, மெர்சிங்கில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஜோகூர் சட்டமன்றத்தின் ஐந்தாண்டு தவணைக் காலம் வருகிற  ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.