Home நாடு தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரிங். 20 மில்லியன் பிரதமர் வழங்கினார்- ராஜேந்திரன்

தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரிங். 20 மில்லியன் பிரதமர் வழங்கினார்- ராஜேந்திரன்

700
0
SHARE
Ad

NAJIB 3கோலாலம்பூர், ஏப்ரல் 4- பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ரிம. 20 மில்லியன் வழங்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்ததை தமிழ்ப்பள்ளிகளுக்கான எதிர்காலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் என்.எஸ். ராஜேந்திரன் தெரிவித்தார்.

முறையான கட்டடமைப்பு இல்லாமல் இருக்கிற தமிழ்ப்பள்ளிகளின், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இந்த ஒதுக்கீடானது கடந்த வாரம் கொடுக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் கீழ் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் கீழ் பிரதமரும், நிதியமைச்சருமாகிய நஜிப் துன் ரசாக் ரிம. 100 மில்லியன்களை புதிய தளம், புதிய கட்டுமானம், மற்றும் தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஒதுக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

rajenthiranகடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தேசிய முன்னணி அரசாங்கம் ரிம. 540 மில்லியன்களை தமிழ்ப் பள்ளிகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ளது என்று பெர்னாமா செய்தியாளர்களிடம் ராஜேந்திரன் தமது அலுவகத்திலிருந்து கூறினார்.

முதல் முறையாக பிரதமர் இந்த ஒதுக்கீட்டை நேரடியாக ஒவ்வொரு பள்ளி மேலாளர் வாரியத்திடம் கொடுக்க சம்மதித்துள்ளார். “நானும் என்னுடைய குழுவைச் சார்ந்தவர்களும் பள்ளிகளுக்கு உதவுவதோடு அதன் வளர்ச்சியை கண்காணிப்போம்” என்று சொன்னார்.

நமது பிரதமர் நஜிப் காலம் என்பது ஒரு சகாப்தம் நிறைந்த காலம். காரணம் தமிழ்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தாம் உத்தரவாதம் தருவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

கம்பூனிட்டி செஸ்ட்(Community Chest) கீழ், அரசாங்கம் பொதுநல அமைப்பு ஒன்றை நிறுவி ரிம 9.139 மில்லியன்களை அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் பிரித்துக்கொடுக்க ஏற்பாடுகள் செய்தது. அதில் எதிர்கட்சியினர் தக்க வைத்துள்ள தொகுதிகளில் இருக்கும் பள்ளிகளும் அடங்கும்.

தொடர்ந்து, ஏழு தேசிய வகை தமிழ்பள்ளிகள் பற்றி பேசுகையில், கடந்த ஆண்டிலிருந்து பாயா பெசார், லூனாஸ் கெடா தமிழ்பள்ளியின் கட்டுமான பணிகள் தொடங்கி விட்டதாகவும் மேலும் ஆறு பள்ளிகளின் கட்டுமான பணிகள் இந்த வருட முடிவுக்குள் தொடங்கிவிடும் என்று சொன்னார்.

அந்த ஆறு தமிழ்ப்பள்ளிகள் எதுவென்றால், தாமான் கெலாடி( சுங்கைப்பட்டாணி, கெடா); இயாஊட் எஸ்டேட், (சுங்கை சிப்புட் பேரா); தாமான் செந்தோசா, (கிள்ளான், சிலாங்கூர்); தாமான் பிஜே எஸ்1, (பெட்டாலிங் ஜெயா, சிலங்கூர்); பண்டார் மாஹோத்தா, (செராஸ், கோலாலம்பூர் ) மற்றும் பண்டார்ஸ்ரீ அலாம், (மாசாய், ஜோகூர்) ஆகும்.

ரிம. 560 மில்லியன்களைக் கொண்டு நஜிப் பிற செலவுகளுக்கு பண ஒதுக்கீடு செய்துள்ளார். அவ்வகையில் லாடாங் தெபுங், மலாக்கா தமிழ்ப்பள்ளிக்கு (ரிம 320,000), மற்றும் கரையான்களால் பழுது போன செமிஞ்சை, சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கு (ரிம 290,000) கொடுத்து வழங்கியுள்ளார்.