Home Video மலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”

மலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”

1084
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜூலை 19 வெள்ளிக்கிழமை (நாளை) வெளியாகவிருக்கும் இரண்டு தமிழ்ப் படங்களுமே ஒவ்வொரு விதத்தில் இரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன.

அமலா பால் நடிப்பில் வெளிவருகிறது ‘ஆடை’. ஆடையின்றி நடித்திருக்கிறார் அமலா பால் என்று நிறைய தகவல்கள் வெளியிடப்பட்டு, அந்தப் படத்திற்கான விளம்பரச் சுவரொட்டிகளிலும் அமலா பால் அரை குறை ஆடையுடன் தோன்றும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் இந்தப் படம் எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் முதல் மூன்று நாட்களுக்கு பெருமளவில் திரையரங்குகள் நிறைந்து வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமலா பால் கவர்ச்சி மட்டுமின்றி படத்தின் இயக்குநரான ரத்னகுமார் ஏற்கனவே ‘மேயாத மான்’ என்ற படத்தை எடுத்து இரசிகர்களைத் தன்னை நோக்கிக் கவனிக்க வைத்தவர். அவரது இயக்கத்தில் வெளிவரும் இரண்டாவது படம் என்பதால், இயல்பாகவே ஓர் எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கு ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் எடுக்கப்பட்ட “கடாரம் கொண்டான்”

#TamilSchoolmychoice

மலேசியாவில் பெரும்பாலானக் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தைத் தயாரித்திருப்பது கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம்.

வழக்கமாக கமல்ஹாசனைக் கதாநாயகனாகக் கொண்டு படம் எடுக்கும் ராஜ்கமல் இண்டர்நேஷனல் அபூர்வமாகவே மற்ற நடிகர்களைக் கொண்டு படத்தைத் தயாரிக்கும். அதன் காரணமாக ‘கடாரம் கொண்டான்’ ஒரு முக்கியமான, சிறப்புப் பெறும் படமாகப் பார்க்கப்படுகிறது.

கமலின் மகள் அக்‌ஷராவும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். விக்ரமின் அதிரடி சண்டைக் காட்சிகளோடு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் ராஜேஷ் செல்வா. ஏற்கனவே, கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை ராஜேஷ் செல்வா இயக்கியிருக்கிறார். உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.

கமல்ஹாசன் தயாரிப்பு, விக்ரம் நடிப்பு என்ற இணைப்பால் இந்தப் படமும் இரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏறத்தாழ ஏழரை மில்லியன் பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் ஈர்த்திருக்கும் “கடாரம் கொண்டான்” படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: