Home நாடு எஸ்ஆர்சி இண்டர்னேஷனல்: வழக்கை இரத்து செய்யும் முறையீட்டை நஜிப் திரும்பப்பெற்றார்!

எஸ்ஆர்சி இண்டர்னேஷனல்: வழக்கை இரத்து செய்யும் முறையீட்டை நஜிப் திரும்பப்பெற்றார்!

594
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் தொடர்பான 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் விசாரணை ஒரு மேம்பட்ட கட்டத்திற்குள் நுழைந்துவிட்டதால், அவ்வழக்கினை இரத்து செய்யுமாறு விண்ணப்பித்த மேல்முறையீட்டைத் தொடர விரும்பவில்லை என்று நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் பார்ஹான் முகமட் ஷாபி மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.

விசாரணையை தள்ளுபடி செய்வது இனி பொருத்தமானதல்ல. இந்த வாதத்தை விசாரணையின் முடிவில் நாங்கள் வைப்போம்,” என்று அவர் கூறினார்.

துணை அரசாங்க வழக்கறிஞர் முகமட் இசாத் பாவ்சான் அவரின் முடிவினை எதிர்க்கவில்லை.

#TamilSchoolmychoice

நீதிபதி அப்துல் ரஹ்மான் செபில் இந்த கோரிக்கையை ஏற்று நஜிப் தரப்பின் முறையீட்டை நிறைவேற்றினார். இன்று 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நஜிப், குற்றவியல் நம்பிக்கை மீறல், அதிகார அத்துமீறல் மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனலின் நிதி சம்பந்தப்பட்ட பண மோசடி தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.