Home கலை உலகம் நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’ தடைகளுக்குப் பிறகு ஜூலை 26 வெளியீடு!

நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’ தடைகளுக்குப் பிறகு ஜூலை 26 வெளியீடு!

856
0
SHARE
Ad

சென்னை: உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய சக்ரி டொலட்டி கடந்த ஆண்டு இயக்கிய திரைப்படம்கொலையுதிர் காலம்‘.

நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவாகி வெளியாக தயார் நிலையில் இருந்தது. ஆயினும், பல்வேறு காரணங்களினால் இப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வந்தது.

இந்நிலையில் இப்படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூலை 26-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இருந்து விலக சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பூமிகா நடித்துள்ளார். எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்க பெரும் எதிர்பார்ப்புகளோடு இப்படம் வெளியாக இருக்கிறது.