Home உலகம் “டிரம்ப் தாமாகவே வார்த்தைகளை விடுபவர் அல்ல!”

“டிரம்ப் தாமாகவே வார்த்தைகளை விடுபவர் அல்ல!”

764
0
SHARE
Ad

வாஷிங்டன்: காஷ்மீரில் நிலவிவரும் நிலைத்தன்மையற்ற நிலையை சரிசெய்ய பிரதமர் நரேந்திர மோடி தம்மிடம் உதவி கேட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடி அப்படியெல்லாம் டிரம்பிடம் கோரிக்கை வைக்கவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு நேற்று செவ்வாய்கிழமை விளக்கம் கொடுத்துள்ளது.

தற்போது, அதிபர் டிரம்பின் ஆலோசகர்களில் ஒருவர், “அதிபர் டிரம்ப் தாமாகவே எதையும் கூறும் நபர் அல்லஎன்று கூறியுள்ளார்

#TamilSchoolmychoice

டிரம்பின் தலைமை பொருளாதார ஆலோசகரான லாரி குட்லோ, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப், தான் நினைத்ததைப் பேசிவிட்டாரோ?” என்று கேட்கப்பட்டது. அதற்கு சீற்றமடைந்த குட்லோ, “இது ஓர் அத்துமீறும் கேள்வி. அதிபர், தனக்குத் தோன்றுவதையெல்லாம் சொல்லக் கூடிய நபர் அல்லஎன்று கூறியுள்ளார்