Home வணிகம்/தொழில் நுட்பம் புரோட்டோன்: 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் எக்ஸ்50 விற்பனைக்கு வரும்!

புரோட்டோன்: 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் எக்ஸ்50 விற்பனைக்கு வரும்!

781
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புரோட்டோன் வெளியீடான எக்ஸ்70 ரக வாகனத்திற்குக் கிடைத்த வரவேற்பு சிறப்பானதாக அமைந்தது போல எக்ஸ்50 ரக வாகனத்திற்கும் நல்லதொரு வரவேற்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2020-ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் எக்ஸ்50 ரக கார் மலேசிய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதே வேளையில், எக்ஸ்70-க்கான மலேசியாவிலேயே தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு குறைந்த விலை நிர்ணயிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எக்ஸ்50 எஸ்யூவி ரக வாகனங்களில் சிறிய அளவிலானது.

ஹோண்டா எச்ஆர்வி மற்றும் டொயோட்டா சிஎச்ஆர் ஆகிய வாகனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த கார் வெளிவர இருக்கிறது.

#TamilSchoolmychoice

ஜப்பானிய வெளியீடுகளுடன் ஒப்பிடுகையில் விலையில் 25,000 ரிங்கிட் முதல் 40,000 ரிங்கிட் வரையிலும் மலிவாக இருப்பதால், எக்ஸ் 70 ரக கார்கள் அமோகமாக விற்பனையாகின. இதே மாதிரி எக்ஸ் 50 வகை கார்கள்  75,000  ரிங்கிட் முதல் 95,000 ரிங்கிட் விலை வரம்பில் நிர்ணயிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

இவ்வாண்டு கார்களுக்கான விற்பனையில் புரோட்டோன் முன்னிலையில் உள்ளது.

இப்போதைக்குஎக்ஸ் 70-க்கான தேவை அதிகமாக உள்ளது என்றும் நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்ட கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 2019-ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில்புரோட்டோனின் ஆண்டு விற்பனை வளர்ச்சியில் 70 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது.