Home நாடு “1998-இல் ஒழுக்கப் பிரச்சனை, 2019-இல் அரசியல் பிரச்சனையா?”- நஜிப்

“1998-இல் ஒழுக்கப் பிரச்சனை, 2019-இல் அரசியல் பிரச்சனையா?”- நஜிப்

809
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 1998-ஆம் ஆண்டில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் கடந்த மாதம் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி ஆகியோருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அளித்த பதில்களில் உள்ள வேறுபாடுகளை நஜிப் அப்துல் ரசாக் தமது டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“1998-இல் இது ஒரு தார்மீக பிரச்சினை, அரசியல் பிரச்சினை அல்ல. ஆனால், 2019-இல் இது ஓர் அரசியல் பிரச்சினை, தார்மீக பிரச்சினை அல்ல.” என்று அவர் சுருக்கமான பதிவிட்டுள்ளார். நஜிப் பெயர்களைக் குறிப்பிடவில்லை என்றாலும், அஸ்மினைக் குறிக்கும் ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பாக மகாதீரின் கருத்துக்களை அவர் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை தமது வலைப்பதிவு இடுகையில், அஸ்மினின் காணொளிக்கு பின்னால் உள்ள சூத்திரதாரி தம்மை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இது ஒழுக்கநெறி பற்றிய கேள்வி அல்ல, இது ஓர் அரசியல் பிரச்சினை. ஆகவே, அரசியல் ரீதியாக மட்டுமே இது கையாளப்படும், ”என்று மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அதிகாரிகள் விசாரணையை முடிப்பதற்கு முன்பே அந்த காணொளி போலியானது என்று வர்ணிக்கும் போது தாம் அஸ்மினுக்கு ஆதரவளிப்பதாக கூறும் கருத்துகளை மகாதீர் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.