Home நாடு அடிப் மரண விசாரணை முடிந்தது, விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்!

அடிப் மரண விசாரணை முடிந்தது, விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்!

762
0
SHARE
Ad

ஷா அலாம்: ஐந்து மாதங்களுக்கு நீடித்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணம் தொடர்பான மரண விசாரணை முடிவுற்றதாக ஷா அலாம் சிறப்பு மரண விசாரணை நீதிமன்ற நீதிபதி ராபியா முகமட் முடித்ததாக இன்று புதன்கிழமை தெரிவித்தார். இனி இந்த வழக்கு தொடர்பாக எந்தவொரு சாட்சிகளும் விசாரிக்கப்பட மாட்டார்கல் என்று அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் அவரவர் சமர்ப்பிப்புகளை செய்ய ஆகஸ்ட் 21-ஆம் தேதியை நீதிபதி நிர்ணயித்தனர்.

நான் ஆதாரங்களில் திருப்தி அடைகிறேன். விசாரணையை நான் இத்துடன் முடிக்கிறேன். தீர்ப்பை வழங்க போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன,” என்று ராபியா கூறினார்.

#TamilSchoolmychoice

அடிப் மரணம் தொடர்பான விசாரணை கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கியது. 41 நாள் விசாரணையின் போது மொத்தம் 30 சாட்சிகள் வரவழைக்கப்பட்டனர்.

சீ பீல்ட் கோயிலுக்கு அருகே நடந்த கலவரத்தின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி  தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அடிப் காலமானார்.