Home நாடு நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின் இந்திய இளைஞர் பிரிவினருடன் வேதமூர்த்தி சந்திப்பு

நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின் இந்திய இளைஞர் பிரிவினருடன் வேதமூர்த்தி சந்திப்பு

993
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜசெக, பி.கே.ஆர். கட்சிகளின் இந்திய இளைஞர் பிரிவினரையும் அரசு சாரா அமைப்புகளின் இளம் பிரதிநிதிகளையும் சந்தித்து சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கருத்துப் பரிமாற்றம் செய்தார்.

கோலாலம்பூர் டைனஸ்டி தங்கும் விடுதியில் கடந்த ஜூலை 24-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு மித்ரா ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், சிலாங்கூர் மற்றும் நெகிரி மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம், பெண்கள் முன்னேற்றம், இளந்தொழில் முனைவோர் உள்ளிட்ட கருப்பொருளில் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களும் இளம் பெண்களும் பேசியதுடன், தங்களின் கருத்துகளையும் முன்வைத்தனர்.

#TamilSchoolmychoice

மித்ராவின் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு, அதில் காணப்படும் ஒருசில பின்னடைவு பற்றியெல்லாம் திறந்த மனதுடன் அதேவேளை ஆக்கப்பூர்வமான வகையில் அனைவரும் பேசினர்.

நிறைவாக, உரையாற்றிய பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி, சமுதாயத்தின் தேவையும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருப்பதால், எடுத்த எடுப்பிலேயே அனைத்தையும் தீர்த்துவிட முடியாது. மித்ராவின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் உரிய முறையில் கொண்டு சேர்க்க இளைஞர்கள் துணை நிற்க வேண்டும் என்றார். அதற்கு இசைவு தெரிவித்த இளைஞர்களிடம் தொடர்ந்து இதுபோன்று அடிக்கடி சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்வதுடன் அடுத்தக்கட்ட நகர்வுக்கு முன்னேறுவோம் என்றார்.

முன்னதாக, மித்ரா இணை இயக்குநர் ம.மகாலிங்கம் மித்ராவின் நடவடிக்கை, இணையத் தகவல், நிகழ் காலப்பணிகள், எதிர்காலத் திட்டம் குறித்தெல்லாம் காணொளிக் காட்சியுடன் விளக்கம் அளித்தார்.