Home 13வது பொதுத் தேர்தல் கிஜால் தொகுதியை தற்காத்து கொள்வேன் – அகமட் சாயிட்

கிஜால் தொகுதியை தற்காத்து கொள்வேன் – அகமட் சாயிட்

513
0
SHARE
Ad

ahmad-saidடுங்குன், ஏப்ரல் 4- எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு கிஜால் தொகுதியை தற்காத்து கொள்ளப்போவதாக திரெங்கானு மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அகமட் சாயிட் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் அவரின் பெயர் இல்லை என்ற வதந்திகளுக்கு அவரின் இந்த அறிக்கையின் மூலம் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டிருக்கின்றது.

நேற்றிரவு டுங்குன் தொகுதி தேர்தல் பணிகளை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பண்டார் தொகுதி சட்டமன்றத்தை மசீச கட்சியை சேர்ந்த டத்தோ தொ சின் யாவ் தற்காத்துக் கொள்வார் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இன்று நாம் ஒருவருக்கு உதவினால், மற்றொரு நாள் அவர்கள் நமக்கு ஆதரவாக இருப்பார்கள். இதனால் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறுவதனால் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது என்று  அர்த்தமாகாது” என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்களை மட்டும் அவர் தெரிவிக்கவில்லை.

அவரிடம் வேட்பாளர்கள் யார் மற்றும் பெண்கள் வேட்பாளர்களைப் பற்றி வினவிய போது, “வேட்பாளர்கள் பெயர்களை அறிவிப்பு செய்யும் வரை காத்திருங்கள்” என்று சுருக்கமாக கூறிச் சென்றார்.