Home 13வது பொதுத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்குப்பதிவுக்கான நாட்களை முடிவுசெய்ய, தேர்தல் வாரியம் நாளை கூடுகிறது!

வேட்புமனுத் தாக்கல் மற்றும் வாக்குப்பதிவுக்கான நாட்களை முடிவுசெய்ய, தேர்தல் வாரியம் நாளை கூடுகிறது!

521
0
SHARE
Ad

The Election Commission (EC)புத்ராஜெயா, ஏப்ரல் 4 – நாளை வெள்ளிக்கிழமையன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புக் கூட்டத்திற்குப் பின், தேர்தல் வாரியம் 13வது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பை வழங்கும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஸிஸ் முகமட் யூசுப் தெரிவித்தார்.

இன்று வியாழன் 3 மணியளவில் தேர்தல் வாரியம் சிலாங்கூர்,கிளந்தான் மற்றும் பினாங்கு நீங்கலாக மற்ற மாநிலங்களவை கலைப்புக்கான அதிகாரப்பூர்வமான ஆணையைப் பெற்றதாகக் குறிப்பிட்டார்.

கிளந்தான் இன்றிரவும், தொடர்ந்து சிலாங்கூர் மற்ற மாநிலங்களும்  தாங்கள் எதிர்பார்த்தபடி தங்கள் மாநிலங்களவைக் கலைப்புக்கான ஆணையை சமர்ப்பிக்கும் என தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக, புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட தேர்தல் தகவல் மையத்தின் வசதிகளை பார்வையிடும்போது நிருபர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice