கோலதிரெங்கானு, ஏப்ரல் 4- இன்று திரெங்கானு மாநில சட்டமன்றம் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பு திரெங்கானு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
விஸ்மா டாருல் இமானில் காலை 9.20 மணியளவில் தேர்தல் இயக்குனராகிய ஃபக்ருல் ரஸி அப் வாஹாமிடம் சபா நாயகர் டத்தோ தெங்கு புத்ரா தெங்கு அவாங் அந்த அறிவிப்பை அளித்தார்.
நேற்றிரவு 8 மணியளவில் சுரா, டுங்குன் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரெங்கானு சுல்தான் மிசான் சைனால் அபிடினிடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகு அவர் திரெங்கானு மாநில சட்டமன்றம் கலைந்தது என்று அறிவித்தார்.
திரெங்கானு மாநிலத்தில் 32 சட்டமன்ற தொகுதிகளும் 8 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. கடந்த சட்டசபையில் தேசிய முன்னணி 8 தொகுதியை தவிர்த்து ஏனைய அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது.
அந்த 8 தொகுதிகளையும் பாஸ் கட்சி தற்காத்துக்கொண்டது. நேற்று மக்களவை கலைப்பதற்கு முன் பாஸ் கட்சியானது திரெங்கானுவில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.