Home நாடு வாக்குப்பதிவுக்கான உகந்த நாட்கள்-ஏப்ரல் 25 ,27 மற்றும் மே 11ஆம் தேதிகள்- வாஸ்து நிபுணர் கணிப்பு

வாக்குப்பதிவுக்கான உகந்த நாட்கள்-ஏப்ரல் 25 ,27 மற்றும் மே 11ஆம் தேதிகள்- வாஸ்து நிபுணர் கணிப்பு

605
0
SHARE
Ad

Yuvaraj-Vaastu-Masterபெட்டாலிங்ஜெயா, ஏப்ரல் 4 – இந்திய வானியல் சாஸ்திரப்படி எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலுக்கு வாக்குப் பதிவுக்கான உகந்த நல்ல நாட்கள் ஏப்ரல் 25 ,27 மற்றும் மே மாதம் 11ஆம் தேதிகள்  ஆகும் என இந்திய ஜோதிட வாஸ்து நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.

ஜோதிடர் மாஸ்டர் யுவராஜ் செளமா (படம்) என்ற அவர் ஜோதிட பாரம்பரியத்தில் வந்த 7வது தலைமுறை ஜோதிடர் மற்றும் வாஸ்து சாஸ்திர நிபுணராவார்.

இந்த தேர்தலுக்காக தாம் குறிப்பிட்டுத் தந்துள்ள நாட்கள், டத்தோஸ்ரீ நஜீப் அவர்களின் பிறந்த தேதியைக் கொண்டு கணிக்கப்பட்டு, அவருக்குப் பொருந்தி வரக்கூடிய நாட்கள் என யுவராஜ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அந்த நாட்களில் தேர்தல் இருந்தால் அவை மக்களுக்கு, பிரதமர் மேல் அதிக ஈர்ப்பைக் கொண்டுவரக்கூடிய நாட்களாக அமையும் என்று அவர் கூறினார்.

மேலும் தெரிவிக்கையில் 23ஆம் தேதி செவ்வாய் ஆதிக்கத்தில் வருவதால் நஜிப்பிற்கு அதுவே மிகவும் உகந்த நாள் என்றும், அன்று அவர் விடுமுறை அறிவித்து தேர்தல் நடத்தவேண்டும் என்றும், மற்ற இரு  (27, மே11) நாட்களும் முறையே 2,3ம் தேர்வே என்றும் அவர் குறிப்பிட்டார்.

எல்லா கோள்களையும் கட்டுப்படுத்தும் சூரியன், பிரதமரின் கோள்சார நிலவரப்படி ஏப்ரல் 15 முதல் மே 15 வரை பிரதமருக்கு அனுகூலமான இடத்திற்கு அவருடைய கட்டத்தில்  வருவதாலும் நஜிப்பின் அதிர்ஷ்ட எண்கள் 1,2,5,7,9 ஆக இருப்பதால், தான் குறித்துக்கொடுத்த எண்களின் கூட்டு எண்களும் அதில் தான் அடங்கும் என்றும் அந்த நாட்களில் அவர் எது தொடங்கினாலும் அவர் விரும்பிய முடிவையே பெறுவார் என்றும் யுவராஜ் மாஸ்டர் தெரிவித்தார்.

நவக்கிரகங்களே மனிதனின் மனதையும் வாழ்க்கையிலும் ஆதிக்கம் செலுத்துவதால், பண்டைய சாஸ்திரங்களின் அறிவையும்,தேர்தலுக்கான தேதியை குறிப்பதில் தேர்தல் வாரியம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று   சென்னையிலிருந்து தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் யுவராஜ் மாஸ்டர்  தெரிவித்தார்.

அவர் தெரிவித்துள்ள இந்த தகவல்களை ஸ்டார் ஆங்கிலப் பத்திரிக்கையின் இணையத் தள செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.