Home Photo News ஹாங்காங்: இரயில்களை நிறுத்த முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் (படக் காட்சிகள்)

ஹாங்காங்: இரயில்களை நிறுத்த முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் (படக் காட்சிகள்)

809
0
SHARE
Ad

ஹாங்காங் – ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஹாங்காங் மக்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்கள் மிகப் பெரிய அளவில் விரிவடைந்துள்ள வேளையில், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் இரயில்களை நிறுத்த அவர்கள் முற்பட்டனர்.

இதன் காரணமாக இரயில் நிலையங்கள் ஒரே களேபரமாகக் காட்சியளித்ததுடன், காலை நேரத்தில் பணிகளுக்குச் செல்லும் பயணிகளின் பயணமும் இதனால் பாதிக்கப்பட்டது.

வார இறுதி தொடங்கி நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களின் போது கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி காவல் துறையின் கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.

#TamilSchoolmychoice

சமூக ஊடகங்களில் பதிவேற்றம் கண்ட அந்த ஆர்ப்பாட்டக் காட்சிகள் சிலவற்றை இங்கு காணலாம்:

-செல்லியல் தொகுப்பு